Perambalur: Public Relations Project Camp in Neykuppai Village; Collector announces!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் வரும் அக்.14அன்று கலெக்டர் (தனது) தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது . அதற்கான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது . எனவே, நெய்க்குப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.