பெரம்பலூர்: பில்லங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்; மாவட்ட நிர்வாகம் தகவல்!

schedule
2025-05-17 | 12:17h
update
2025-05-17 | 12:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public Relations Project Camp in Pillankulam Village; District Administration Information!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமத்தில், எதிர்வரும் 27.05.2025 (செவ்வாய் கிழமை) அன்று கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதில், தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, வேப்பந்தட்டை வட்டம், பில்லங்குளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பில்லங்குளம் கிராம நிருவாக அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2026 - 05:57:54
Privacy-Data & cookie usage: