பெரம்பலூர்: துங்கபுரம் கிராமத்தில் கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்!

schedule
2024-11-29 | 13:22h
update
2024-11-29 | 13:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public relations project camp led by the Collector in Thungapuram village!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் (வடக்கு) கிராமத்தில், 11.12.2024 (புதன் கிழமை) அன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, துங்கபுரம் (வடக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை துங்கபுரம் (வடக்கு) கிராம நிருவாக அலுவலகத்தில், முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே வருவாய்த்துறை அலுவலர்களிடம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 21:00:19
Privacy-Data & cookie usage: