பெரம்பலூர்: நகரில் சிக்னல், பஸ் ஸ்டாப்களில் நிழற்பந்தல் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

schedule
2026-05-18 | 17:17h
update
2026-05-18 | 17:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public Requests Installation of Shelters at Traffic Signals and Bus Stops in the Town.

2024 Photo

Advertisement

பெரம்பலூர் நகரில் தற்போது அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் நடந்து வருகிறது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வந்து கார் காலம் போல் குளிர்வித்து வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் அதிகரித்த நிலையே நீடிக்கிறது. கோடை மழை இல்லாத நாட்களில் காமராஜர் வளைவு, ரோவர் ஆர்ச் சிக்னல்களிலும், பாலக்கரை பஸ் ஸ்டாப்பிம் பஸ் ஏற நிற்கும் மக்களும் வெயிலில் சிரமப்படுகின்றனர். இதனை போக்கும் வகையில் கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டும் கோடை காலம் முடியும் வரை நிழற்பந்தல் அமைத்து பொதுமக்களை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, நகராட்சி நிர்வாகம், காவல் துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.05.2026 - 17:24:23
Privacy-Data & cookie usage: