பெரம்பலூர்: அதிகாரிகளை கண்டித்து, காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்!

schedule
2026-07-27 | 15:37h
update
2026-07-27 | 15:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Public stage road blockade with empty pots, demanding drinking water and condemning officials!

Advertisement

பெரம்பலூர் 4 ரோடு அடுத்த அரியலூர் சாலையில் உள்ள கவுல்பாளையம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், கடந்த சுமார் ஒரு மாத காலமாக முறையான குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனவும், இன்று அப்பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முறையான பதில் அளிக்காத அதிகாரிகளை கண்டித்து பெரம்பலூர் – அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மழை பெய்யபோதும் நகரால் மறியல் போராட்டதில் தொடர்ந்து ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரம்பலூர் – அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.07.2026 - 16:26:17
Privacy-Data & cookie usage: