பெரம்பலூர்: உள்ளே ஆஸ்பிட்டல்! வெளியே மெடிக்கல்!! நடத்திய போலி டாக்டர் கைது!!

schedule
2025-11-13 | 12:42h
update
2025-11-13 | 14:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Quack Doctor who practiced English medicine arrested!

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தில் ஜகநாதன் மகன் கதிர்வேல் என்பவர் கே.கே என்ற மெடிக்கல் கடையை நடத்தி வருகிறார். இவரது, வீட்டில் பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காமலேயே நோய்க்காக ஆங்கில முறை மருத்துவம் செய்து வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கொ. மாரிமுத்து தலைமையில் நேரடியாக தல ஆய்வு நடத்தியதில், கதிர்வேல் வீட்டினுள் ஆங்கில வழி மருந்து மாத்திரைகள் ஊசி போட்டு பொதுமக்களுக்கு வைத்தியம் செய்து வந்தது உறுதி செய்தனர். பின்னர். மங்களமேடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கதிர்வேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 02:15:58
Privacy-Data & cookie usage: