பெரம்பலூர்: ஆவின், போக்குவரத்து துறைகள் போல சர்க்கரை ஆலை நஷ்டத்தையும் அரசே ஏற்க தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் கோரிக்கை!

schedule
2025-09-17 | 15:27h
update
2025-09-17 | 15:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Raja Chidambaram, the state secretary of the Tamil Nadu Farmers’ Association, has demanded that the government bear the losses of the sugar mill, just like the Aavin and transport departments!

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 48வது முன்மாதிரி பேரவை கூட்டம் இன்று சர்க்கரை துறையின் பொது மேலாளர் மாலதி தலைமையிலும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் பொறுப்பு தலைமை நிர்வாகி ராமன் முன்னிலையிலும் சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் பேசியதாவது: பெரம்பலூர் சர்க்கரை ஆலையை புனரமைக்க அரசாணை 81 தொழில்துறை நாள் 21.7.2009 நிலுவையில் இருந்த கடன் மீதான வட்டி 24.75 கோடியையும் பங்காக மாற்றியதாலும் அரசாணையில் குறிப்பிட்ட எத்தநாள் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை பங்கு மூலதனமாக 8,70,00,000 அரசாணை எண் 189 ன் படி பங்காக மாற்றியதனாலும் அரசு மூலதன கடன் 3762.36 லட்சம் உயர்ந்தது.

வழிவகை கடனில் குறிப்பிட்ட தொகையை கட்டாததினால் அரசாணை எண் 88 நாள் 26.3.2019ன் படி 121 கோடியே 10 லட்சத்து 440.87 ஆக பங்கு மூலதனம் உயர்ந்தது. 48வது ஆண்டு அறிக்கை புத்தகத்தில் பக்கம் 36,37ல் குறிப்பிட்டபடி இந்த ஆண்டு வழிவகை கடனையும் பக்கம் 72,73 ல் குறிப்பிட்டுள்ள வழிவகை கடனையும் வரும் ஆண்டில் பங்காக மாற்றுவார்கள். இதுபோன்று மாற்றாமல் இருக்க ஒரே தீர்வு ஆவினிலும் போக்குவரத்து துறையிலும் ஏற்படுகின்ற நஷ்டத்தை அரசே ஏற்றுக் கொள்வது போன்று இந்த வழிவகை கடனையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisement

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் போட்ட பங்கு மூலதனத்தை குறைக்க மாட்டோம் என சர்க்கரைத் துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை மீறி விவசாயிகள் பங்கை குறைத்ததை கண்டிப்பதோடு விவசாயிகளின் பங்கு ஏற்கனவே இருந்தை போன்று நீடிக்க கேட்டுக் கொள்கிறோம்.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இருந்து மின் உற்பத்தி திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்வாரியத்திற்கு வழங்குவதை முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் அதற்குரிய தொகை என்ன என்பது குறித்து ஆலை நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் இதுவரை தெரிவிக்காமல் இருப்பதை கண்டிப்பதோடு 2019ல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து மின் உற்பத்தி செய்து ஏற்றுமதி ஆன கணக்கையும் மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய கடனில் எவ்வளவு பாக்கி உள்ளது என்பதை தெரியப்படுத்த வேண்டும் .

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டத்தினை தொடங்கும் போது 18 மாதங்களில் முடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டு பின்னர் 13 ஆண்டுகள் வரை இத்திட்டத்தை கால தாமதப்படுத்தியதோடு வருடங்கள் அதிகமாக ஆகிதன்காரணமாக ஏற்பட்ட கூடுதல் வட்டியை அரசு ஏற்க வேண்டும்.மேலும் இத்திட்டத்தை தற்போது மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளதை அரசு ஏற்றுக்கொள்ள கூடாது.

ஆலையில் இணை மின் உற்பத்தி திட்டத்திற்காக விவசாயிகளிடம் பெறப்பட்ட தொகைக்கு நிறுவன விவகார அமைச்சகம் பங்குகளை வெளியிடுவதற்கான முன்மொழிவை அரசாணை 80ன்படி நிராகரித்திருப்பதை கண்டிக்கிறோம். விவசாயிகள் போட்ட பங்குகளையோ அல்லது அதற்கான தொகையை வட்டியுடன் உடன் திரும்ப விவசாயிகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினார்.

இக்கூட்டத்தில் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஞானமூர்த்தி பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ராஜேந்திரன் கரும்பு பயிரிடுவர் சங்க தலைவர் டி கே ராமலிங்கம் டிராக்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக் கூட்டத்தில் ஆலையின் கரும்பு பெருக்கு அதிகாரி சீத்தாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 11:09:37
Privacy-Data & cookie usage: