மண்டல அலுவலர்களுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு

schedule
2016-03-18 | 10:31h
update
2026-06-22 | 09:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மண்டல அலுவலர்களுக்கான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இப்பயிற்சி வகுப்பின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் பார்வையிட்டார்.

பயிற்சி வழங்கப்படுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் மண்டல அலுவலர்களிடம் பேசும்போது உங்களுக்கு எழுகின்ற அனைத்து சந்தேகங்களையும் தயங்காமல் கேட்டு தெளிவுபெற வேண்டும்.

அலுவலராக இல்லாமல் சாமானிய மனிதனாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களை கேளுங்கள், ஏனெனில் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துதரப்பு மக்களும் பயன்படுத்தப்போகிறார;கள். எனவே, அவர;களின் சந்தேகங்களுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் உங்கள் கேள்விகள் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Advertisement

நடைபெறவுள்ள சட்டமன்ற தோ;தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தேர்தலில் எந்த விதமான பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்படவும் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய நடமுறைகள் குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இப்பயிற்சி வகுப்பின் முற்பகலில் குன்னம் தொகுதிக்குட்ப்பட்ட 30 மண்டல அலுவலர்களுக்கும், பிற்ப்பகல் பிரிவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட 33 மண்டல அலுவலர்களுக்கும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை இயக்குவது குறித்த சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பயிற்சி அலுவலரும் சிறப்புத்திட்ட அமலாக்கத்தின் தனித்துணை ஆட்சியருமான சிவப்பிரியா பதில்களை விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 09:28:16
Privacy-Data & cookie usage: