பெரம்பலூர்: குடியரசு தினவிழா; தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

schedule
2026-01-26 | 05:43h
update
2026-01-26 | 05:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Republic Day celebrations; the Collector hoisted the national flag and distributed welfare assistance.

இந்தியாவின் குடியரசு தினவிழாவை முன்னிட்டு பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் ந.மிருணாளினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகளை போலீஸ் எஸ்.பி அனிதா முன்னிலையில் வகித்தார். தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த கலெக்டர் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 21 போலீஸ்களுக்கு முதலமைச்சர் பதக்கங்களையும், 53 போலீசாருக்கு சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த 362 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

Advertisement

போலீஸ் அணிவகுப்பில் படையின் தளபதியாக ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையேற்று அணிவகுப்பை வழி நடத்தினார். முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், 2ம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர சீமான், 3ம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம், மேலும் ஊர்க்காவல் படை முதலாம் படைப்பிரிவிற்கு உதவி படைப்பிரிவு தளபதி ஆல்பர்ட் ஆகியோர், தலைமையேற்று வழி நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் 37 பயனாளிகளுக்கு ரூ.23.59 லட்சம் மதிப்பிலும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.75,000-ம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 05 பயனாளிகளுக்கு ரூ.33,450 மதிப்பிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.27 லட்சம் மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.17 லட்சம் மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3.76 லட்சம் மதிப்பிலும், தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.30..15 லட்சம் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.6.00 லட்சம் மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.58.34 லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.50.40 லட்சம் மதிப்பிலும், தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 18 நபர்களுக்கு ரூ.60,000 மதிப்பிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் விபத்து மரணம் உதவித்தொகை 1 பயனாளிக்கு ரூ.2.05 லட்சம் மதிப்பிலும், சமூகநலத்துறையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.6.00 லட்சம் மதிப்பிலும் என பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 113 பயனிகளுக்கு ரூ.1,87,00,704 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை, குரும்பாலூர், வேப்பூர் ஆகிய அரசு கலை மற்றும் அறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 522 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அனைத்து துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
20.04.2026 - 02:47:49
Privacy-Data & cookie usage: