Perambalur: Republic Day celebrations were held at Almighty Vidyalaya Public School, presided over by Chairman Ramkumar!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் இன்று காலை நாட்டின் 77 வது குடியரசு தின விழா பள்ளி சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. தேசிய கொடியை ஏற்றி வைத்த அவர் வாழ்த்துரை வழங்கினார். முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம், வித்யா, துணை முதல்வர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனிபா உள்பட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். உறுதிமொழி மற்றும் கொடி வணக்கப் பாடல் பாடப்பட்டது. குடியரசு நாள் பற்றியும், அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் பின்பற்றுவது அதன் வழி நாம் நடப்பது பற்றியும், இந்த குடியரசு தினத்தை பெறுவதற்கு நம் முன்னோர்கள் செய்த தியாகம் பற்றியும், விரிவாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்.