Perambalur: Request to prevent the dumping of meat waste in bulk in the Koneri River!
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் செல்லும் கோனேரி ஆற்றில், கோழி, மீன், பன்றி, இறால், காடை போன்றவற்றின் இறைச்சி கழிவுகளை கறிக்கடை வியாபாரிகள் தொடர்ந்து முறையாக அப்புறப்படுத்தாமல், மூட்டை மூட்டையாக கொட்டி வருவதால், ஆறு சுற்று வட்டாரப் பகுதியில், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. அதோடு குடியிருப்புகளும் உள்ளது. அதோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மட்டுமல்லாது, குடியிருப்புவாசிகள், விவசாயிகள், வழிபோக்கர்கள் வீசும் துர்நாற்றத்தால் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும், இந்த துர்நாற்றத்தால் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
சட்ட விரோதமாக கொட்டப்படும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு, நீர் வாழ் உயிரினங்களும், ரத்தம், குடல், தோல் போன்றவைகளை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதோடு, பொது நலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். முறையாக திடக்கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதையும் மீறுவோர்களுக்கு கடை நடத்தும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து அலட்சியம் காட்டமால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைளை உடனே எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.