பெரம்பலூர்: எசனை அரசு பள்ளியில் இருந்து

கடைவீதி வரையிலான தார்ச்சாலையை அகலப்படுத்த அரசுக்கு கோரிக்கை!

schedule
2025-09-18 | 14:33h
update
2025-09-18 | 14:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Request to the government to widen the tar road from Esanai Government School to Bazzar!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் உள்ளது. பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் இருந்து எசனை பிரிவு சாலையில் இருந்து எசனை கடைவீதி வரை செல்லும் தார்சாலையை டபுள் தார் சாலையாக மாற்ற பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

எசனை கிராமத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகாரிகள் ஆதரவுடன் கல் உடைக்கும் குவாரி தொழில் வெகுசிறப்பாக நடந்து வருகிறது. நாள் முழுவதும், பொதுமக்களின் வாகனங்கள், குவாரிக்கு ஜல்லி ஏற்ற பல மாவட்டங்களில் இருந்து வரும் கனரக லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள தார்சாலை போதுமான அளவிற்கு அகலமில்லாததால், பள்ளி வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள், பிற வாகன ஓட்டிகள், வடக்குமாதவி மற்றும் அனுக்கூர் வழியாக நெய்க்குப்பை, குடிக்காடு, பிரம்மதேசம், வாலிகண்டபுரம் ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் பெரும் சிரமமடைந்து ஒதுங்கி செல்கின்றனர். வாகனங்களின் பெருக்கதிற்கு ஏற்ப தற்போது உள்ள சிறிய தார்சாலையை இரு மடங்காக அகலப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 04:37:24
Privacy-Data & cookie usage: