பெரம்பலூர்: நகராட்சி கழிவுநீர் கசிவால் குடியிருப்புவாசிகளுக்கு மர்ம காய்ச்சல்! ஒரு மாதமாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

schedule
2026-09-30 | 08:24h
update
2026-09-30 | 08:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Residents suffer from a mysterious fever due to municipal sewage leakage; public alleges no action has been taken despite complaints lodged over the past month.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட ரோவர் பள்ளியின் மேற்கு பகுதியில் உள்ள பாரதிதாசன் 3வது தெருவில் பாதள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வெளியேறி தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் தொடர்ந்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் தொடர்ந்து அடுத்தடுத்து மர்ம காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும், பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களிடம் இது குறித்து கடந்த ஒரு மாதமாக புகார் தெரிவித்தும், இன்று வரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், மேலும், தெருக்களிலும், காலியிடங்களிலும், பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து ஓடி தேங்கி நிற்பதோடு தெருக்களில் பாய்வதால் குழந்தைகள் விடுமுறையில் தெருக்களில் மாலை நேரங்களில் விளையாட முடியாமலும், காலை நேரங்களில் துர்நாற்றம் வீசுவதால் வீட்டுக்குள் இருக்கு முடியாத நிலையால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக குடியிருப்போர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு, நகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் அடைப்பை சரிசெய்ய வேறு ஏதேனும் எதிர்பார்த்தால் அதையும் செய்து கொடுக்கவும் தயராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே, நகராட்சி அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் வீடுகளில் துர்நாற்றம் இல்லாமல் வசிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.09.2026 - 08:35:41
Privacy-Data & cookie usage: