பெரம்பலூர்: திமுக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு தேர்தல் பணி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விசிக கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2026-04-28 | 17:24h
update
2026-04-28 | 17:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Resolution passed at a VCK meeting expressing gratitude to everyone who worked on the election campaign for DMK candidate Jayalakshmi.

பெரம்பலூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. தங்க.சண்முகசுந்தரம் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிச்சைப்பிள்ளை , மாவட்ட செய்தித் தொடர்பாளர் அழகுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்ட துணை செயலாளர்கள் வெற்றியழகன், இடி முழக்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலு, காட்டு ராஜா, பாக்கியராஜ், ஸ்டாலின்லால், அய்யம்பெருமாள் மாவட்ட செயலாளர் (இ.எ.பா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

தமிழ்தேசிய எழுச்சி மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஒன்றிய வாரியாக நடத்துவது, வேர்களை தேடி பயணத்தை மீண்டும் தொடர்வது, 2026 சட்டமன்ற தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் மருத்துவர் ஜெயலெட்சுமிக்கு சிறப்பாக தேர்தல் பணி ஆற்றிய பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வது,

2026 சட்டப்பேரவை தேர்தலில் தலைவரால் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் மேலிட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட ( தற்போதைய மாநிலச் செயலாளர்) வழக்கறிஞர் ரத்தினவேல், தற்போதைய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் மாவட்ட நிர்வாக குழு மீது ஆதாரமற்ற அவதூறு செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பை கெடுத்து கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் நடந்து கொள்கிறார். கட்சி தலைமை அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் இரத்தின வேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைவருக்கு பரிந்துரை செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் கேட் மணி நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 17:44:56
Privacy-Data & cookie usage: