பெரம்பலூர்: குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26,000-ஆக உயர்த்தக் கோரி கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

schedule
2026-08-02 | 12:24h
update
2026-08-02 | 12:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Resolution passed at Communist Party meeting demanding a minimum wage hike to Rs. 26,000!

சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பெரம்பலூர் மூன்று ரோடு CITU அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலார் ரெங்கராஜ் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாய பொருள்களுக்கு சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், விவசாய கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் மின்சார துறையை தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூபாய் 26000 உயர்த்த வேண்டும்,

Advertisement

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் வழங்கி மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்படுத்திய தேச விரோத வர்த்தக ஒப்பந்தங்களை ( FTAS) ரத்து செய்ய வேண்டும்,

பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையை கைவிட வேண்டும், ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் பழைய ஓய்வூதி திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், கல்வி மற்றும் தேர்வு முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது. மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 காலை 11.00 மணியளவில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

ஆட்டோ சங்க செயலாளர் ரெங்கநாதன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சிவசங்கர் கிளை நிர்வாகிகள் குமார், செல்வா கனகராஜ் சாலையோர வியாபாரி சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மாவட்ட பொருளாளர் சுரேஷ் , மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் செல்வி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வேணி கொளஞ்சி, பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மணி ஆகியோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.08.2026 - 12:28:00
Privacy-Data & cookie usage: