பெரம்பலூர்: மாநகராட்சியாக அறிவித்ததற்கு முதலமைச்சர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

schedule
2025-05-08 | 07:17h
update
2025-05-08 | 07:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Resolution passed at the district DMK executive committee meeting thanking the Chief Minister and ministers for declaring it a corporation!

பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்‌.பிரபாகரன் முன்னிலையில், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ.கே‌அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், கிளைகளில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்குவதற்காக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் படிவங்கள் வழங்கப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கும் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உடைய “நாடு போற்றும் நான்காண்டு” சாதனைகளை விளக்கி அனைத்து ஒன்றியங்களிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, மதுரையில் வருகின்ற ஜீன்-01 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வது, ஜீன்-01, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், கருத்தரங்கம் நடத்துவது, அனைத்து கிளைகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்குவது எனவும்,

Advertisement

பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்தற்கும், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்,கொளக்காநத்தம் ஊராட்சியில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அறிவித்தற்கும், வேப்பந்தட்டை ஒன்றியம், வேப்பந்தட்டையில் புதிய தீயணைப்பு நிலையம் அறிவித்தற்கும், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே‌என்.நேருவிற்கும், துணைப் பொதுச்செயலாளர் ஆ‌.இராசா.எம்.பி., போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுசெல்வி ராஜேந்திரன், எஸ்.அண்ணாதுரை, அழகு.நீலமேகம், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்‌.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,

ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார்,வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,
அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், பேரூர் செயலாளர்கள்‌ அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலெட்சுமி சேகர், லெப்பைக்குடிக்காடு ஏ.எஸ்.ஜாகிர்உசேன், குரும்பலூர் எம்.வெங்கடேசன்,

மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஹரிபாஸ்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு.தங்கராசு, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கவியரசு, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், முன்னாள் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை,

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்‌.மணிவாசகம்,
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:16:38
Privacy-Data & cookie usage: