Perambalur: Resolution passed at VCK meeting to reclaim Panchami lands and restore them to Adi Dravidars.
பெரம்பலூர் மாவட்ட விசி கட்சியின் வேர்களை தேடி (மக்களை தேடி) நிகழ்ச்சி வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிம்பலூர் கிராமத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல்வேல்பழனிமுத்து வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் இடிமுழக்கம், வெற்றியழகன், கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் பிச்சை பிள்ளை, மண்டல துணை செயலாளர் மன்னர் மன்னன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்
பிம்பலூர் பகுதியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி விசிக சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, பிம்பலூர் பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான குன்னத்திலிருந்து கை.களத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து பள்ளி மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் பிம்பலூர் வழியாக இயக்க வேண்டும் எனவும், தலைவாசலில் இருந்து பசும்பலூர் வரை செல்லும் 32 எண் பேருந்தை பிம்பலூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
.வி.களத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக பொதுமக்கள் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவை பூர்த்தி செய்யும் வகையில் நிறுத்தி வைக்க வேண்டும், பிம்பலூர் பகுதியில் பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. காசிலிங்கம், பிச்சைப்பிள்ளை, கோவிந்தராஜ் செல்வகுமார் உள்பட பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.