பெரம்பலூர்: விவசாய நிலப்பகுதியில் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

schedule
2025-10-28 | 07:44h
update
2025-10-28 | 07:44h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Road blockade in protest against setting up a crusher on agricultural land!

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் விவசாய நிலப் பகுதிகளில் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து பொதுமக்கள் பெரம்பலூர்- அரியலூர் சாலையில், கவுல் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கவுள்பாளையம் கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் பாண்டியன் (50) என்பவர் செங்குணம் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் புதிதாக கிரஷர் அமைப்பதற்கு பாண்டியன் நேற்று தேதி பூமி பூஜை போட்டார். இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி கிரஷர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டவுன் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், கிரஷர் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்புவதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 01:08:10
Privacy-Data & cookie usage: