Perambalur: Road safety month; bike awareness rally organized by the police!
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பெரம்பலூரில், 37 – வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து நடந்த பைக் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் எஸ்.பி அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி-க்கள் (தலைமையிடம்) கோபாலசந்திரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலமுருகன், டி. எஸ்.பி-க்கள் பெரம்பலூர் ஆரோக்கியராஜ், மங்களமேடு ஆனந்தி, பெரம்பலூர் டவுன் போக்குவரத்து போலீஷ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் தொடங்கி பேரணி, பழைய பேருந்துநிலையம் சென்று பின் புதிய பேருந்து நிலையம், 4ரோடு, 3ரோடு, துறைமங்கலம் வழியாக மீண்டும் பாலக்கரை வந்தடைந்தது.