பெரம்பலூர்: ரூ. 2 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

schedule
2025-12-15 | 19:04h
update
2025-12-15 | 19:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Road widening work at a cost of Rs. 2 crore was inaugurated by Minister Sivasankar!

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருமாந்துறை முதல் செந்துறை வரை உள்ள சாலையினை இரு வழித்தட சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

Advertisement

நெடுஞ்சாலை துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமாந்துறை முதல் அகரம்சீகூர்- அங்கனூர் – செந்துரை சாலையில் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சுமார் 2 கி.மீ நீளமுள்ள சாலையினை இரு வழித்தட சாலையாக அகலப்படுத்தி, உறுதிப்படுத்தும் பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள். இப்பணியினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இதன் மூலம் லெப்பைக்குடிக்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படுள்ளது.
அதனைத்தொடர்ந்து, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக மூலதன நிதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.8.35 லட்சம் மதிப்பிலான குப்பைகளை தரம் பிரித்து கொண்டு செல்லும் வாகனங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கோமதி, உதவி பொறியாளர் திரு.ராஜ்மோகன், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி மற்றும் ஒப்பந்ததாரர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 21:32:41
Privacy-Data & cookie usage: