Perambalur: Robbers enter jewelry store; escape after being alarmed!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (67). இவர், அதே ஊரில், பைபாஸ் சர்வீஸ் சாலை அருகே நகைக் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல வியாபாரத்தை முடிந்த பிறகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நள்ளிரவில் அந்த கடையில் நகைகளை கொள்ளையடிப்பதற்காக மர்ம கும்பல் ஒன்று வந்தது. அப்போது கடையில் காவலுக்கு இருந்த ஜெயராமன் (60). என்பவரை வாயில் டேப்பை ஒட்டி கடைக்கு பின்புறம் தூக்கி வீசினர். அவர்கள் கடையின் பூட்டை கேஸ் கட்டிங் மூலம் உடைத்தனர். அப்போது, தமிழரசனுக்கு செல்போனில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடப்பது குறித்து தொடர்ந்து, அலாரம் அடிக்கும் சிக்னல் கிடைத்தது. உடனடியாக அவர் கடைக்கு சென்றார். அவரை கண்டதும் கொள்ளையர்கள் காரில் ஏறி தப்பி தலைமறைவாகினர். இது குறித்து தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கொள்ளையர்கள் விட்டு சென்ற கருவிகள் மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்தனர். மேலும், கடை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாக காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்ககளை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைக்கு எதிரிலேயே சுமார் 500 மீட்டர் தூரத்தில் போலீஸ் ஸ்டேசன் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்பகுதியில் அடிக்கடி கொள்ளையர்கள் கைவரசை காட்டி வருகின்றனர் என்பதால், இரவு நேரங்களில் பாடாலூர் – ஊட்டத்தூர் பிரிவு சாலையில் போலீஸ் பாதுகாப்பு பணியை அதிகாரிக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பாடாலூர் போலீஸ் காவல் எல்லைப்பகுதி அதிகமாக இருப்பதால் நக்கசேலம் அல்லது அடைக்கம்பட்டி புதிய காவல் நிலையம் அமைப்பதோடு, கூடுதல் போலீசாரையும் நியமிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையின் பூட்டை யாராவது உடைத்தால், அலாரம் ஒலிக்கும் வகையில் நகக்கடை உரிமையாளர் தமிழரசன் ஏற்பாடு செய்து இருந்ததால், கடையில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் தப்பியதில், அவர் பெரும் நிம்மதி அடைந்தார்.