Perambalur: Route March Conducted Jointly by Border Security Force Personnel and Police!
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி முனைவர்.கி.பிரபாகர் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்கள் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு (Route March) நடத்தினர்.
இந்த அணிவகுப்பை போலீஸ் எஸ்.பி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ரோவர் ஆர்ச்சில் தொடங்கி பழைய பேருந்து நிலையம் காந்திசிலை, ராமகிருஷ்ணா பள்ளி வரை நடந்தது. மேலும், இன்று காலையில் வ.களத்தூர் பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன், பொதுமக்கள் அமைதியான மற்றும் சுதந்திரமான சூழலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், பெரம்பலூர் டி.எஸ்.பி ரவிச்சந்திரன், மங்களமேடு டி.எஸ்.பி ஆனந்தி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.எஸ்.பி மயில்சாமி, ஆயுதப்படை டி.எஸ்.பி சுப்பையன் மற்றும் எல்லையோர பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.