பெரம்பலூர்: ரோவர் பள்ளி கட்டிடம்; துரை வைகோ எம்.பி திறந்து வைத்தார்!

schedule
2026-10-21 | 19:47h
update
2026-10-21 | 19:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Rover School building inaugurated by MP Durai Vaiko!

பெரம்பலூர் தந்தை ரோவர் ஆரம்பப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் மேலாண் துணை தலைவர் ஜான் அசோக்குமார் தலைமையில் நடந்தது. பெரம்பலூர் எம்எல்ஏ சிவக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதிமுக முதன்மை செயலாளர் துரை. வைகோ எம்பி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள ரோவர் கேன்டினை துரை வைகோ திறந்து வைத்தார். ரோவர் கல்வி நிறுவன கல்வி இயக்குநர் சக்தீஸ்வரன் , நிர்வாக அலுவலர் ஜெயசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.10.2026 - 20:07:51
Privacy-Data & cookie usage: