பெரம்பலூர் ரவுடி தூக்கிட்டு தற்கொலை! போலீஸ் விசாரணை!!

schedule
2023-01-23 | 20:31h
update
2026-09-03 | 05:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur rowdy hanged himself! Police investigation!!

பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்த முருகேசன். இவர் பிரபல ரவுடி. கொலை வழக்கில் தொடர்புடையவர். கடந்த 2 நாட்களாக அவரது வீட்டிற்கு செல்லாமல் இவரது உறவினரான பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் செல்வக்குமார் என்பவரின் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதும் போவதுமாக இருந்துள்ளார்.

Advertisement

வீட்டில் மதியம் முருகேசன் இருந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டிற்கு சென்று போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேசன் ஓட்டு வீட்டின் நிலைக்கதவிற்கு மேல் உள்ள பனை மரக்கலியில் சேலையால் தூக்கு மாட்டி இறந்தது தெரியவந்தது.

புகாரின் பேரில், பெரம்பலூர் எஸ்ஐக்கள் குமார் மற்றும் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து செய்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரை சேர்ந்த பாண்டி என்கிற வல்லதரசுவின் கொலை வழக்கில் ரவுடி முருகேசனுக்கு தொடர்பு உள்ளது. இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாகபாண்டி, கொலை வழக்கு விரைவில் வர இருப்பதாகவும், அதில் தண்டனையாகிவிடும் என்பதாலும் வக்கீலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், பணம் ரெடி பண்ண வேண்டும் என்றும், மனநிலை சரியில்லை என கூறிய முருகேசன் கடந்த 2 நாட்களாக மிகுந்த மதுபோதையில் இருந்து வந்தது தெரியவந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:40:08
Privacy-Data & cookie usage: