பெரம்பலூர்: தஞ்சாவூர் மாவட்ட பதிவாளருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்; மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவு!

schedule
2026-06-17 | 16:43h
update
2026-06-17 | 16:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Rs. 35,000 fine imposed on Thanjavur District Registrar; District Consumer Commission issues order!

அரியலூர் காமராஜ் நகரில் வசித்து வரும் மணிகண்டன் என்பவர் தஞ்சாவூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அரியலூரில் உள்ளது. இந்நிறுவனத்தில் மணிகண்டன் 3 லட்ச ரூபாய் சீட்டில் சேர்ந்து தொகை முழுவதையும் வட்டியுடன் செலுத்தி உள்ளார். இந்த நிலையில் மேலும் தொகை நிறுவனத்தால் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து மணிகண்டன், தஞ்சாவூர் மாவட்ட பதிவாளரிம் 19/7/2025-ஆம் அன்று மனு தாக்கல் செய்து, ஆவணங்களின் சான்றிட்ட நகல்களையும் ஆவணங்களையும் பார்வையிட கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், மாவட்ட பதிவாளர் ஆவணங்கள் எதுவும் வழங்காததால் மேல்முறையீடு தாக்கல் செய்தர். மேல்முறையீட்டின் படியும் ஆவணங்கள் வழங்கப்படாததால் வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு கொடுத்துள்ளார். அப்போதும் மனுதாரர் மணிகண்டனுக்கு மாவட்ட பதிவாளர் எவ்வித ஆவணங்களையும் வழங்காததால் மணிகண்டன் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைவர் ஜவஹர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் மனுதாரர் கேட்ட ஆவணங்களை வழங்காததால், ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்கு இழப்பீடாக ரூ25 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ 10 ஆயிரம் என மொத்தம் ரூ35 ஆயிரம் வழங்க பிறப்பித்ததது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 17:05:06
Privacy-Data & cookie usage: