பெரம்பலூர்: உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண உதவி!

schedule
2026-10-05 | 16:45h
update
2026-10-05 | 16:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Rs. 5 lakh relief assistance provided to the family of a deceased police officer

1993ஆம் வருடம் பணியில் சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் என்ற குழுவைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். இக்குழுவில் உள்ள காவலர்கள் உயிரிழக்கும் போது அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ ஜெயராமன் விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் சார்பில் 27வது பங்களிப்பு தொகையாக ரூ. 5 லட்சம் நிவராண உதவியை போலீஸ் எஸ்.பி லலித்குமார் தலைமையில் போலீசார் வழங்கினர். உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ ஜெயராமன் மகன் அகிலன், மகள் ஆர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது 1993 பேட்ஜை சேர்ந்த எஸ்.ஐ-க்கள் கண்ணுசாமி, ராஜாராம், சண்முகம் உள்ளிட்ட போலீசார் பலர் உடனிருந்தனர். இதே போல தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உயிரிழந்த 10 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வீதம் ரூ. 50 லட்சம் வழங்கி உள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.10.2026 - 17:12:17
Privacy-Data & cookie usage: