பெரம்பலூர் ஊரக வளர்ச்சி வங்கியின் புதிய கட்டிடம் திறப்பு விழா : எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு.

schedule
2018-08-31 | 20:27h
update
2026-07-05 | 23:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Rural Development Bank’s new building opening ceremony: MPs and MLAs participating.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

Advertisement

இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி. இராமச்சந்திரன்(குன்னம்) ஆகியோர் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தனர்.

அதன்படி, இன்று திறப்பு விழா கண்ட, பெரம்பலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் புதிய அலுவலக கட்டிடமானது தலைவர் அறை, பாதுகாப்பு அறை மற்றும் அலுவலக அறை என ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 11 சதுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நாளான இன்று பெரம்பலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் இ-சேவை மையத்தின் மூலமாக 6 நபர்களுக்கு வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ்களும், 5 நபர்களுக்கு ரூ.1,10,000- மதிப்பிலான நகைக் கடன்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைவர் டி.என். சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பெரியசாமி, பெரம்பலூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மண்டல மேலாளர் (திருச்சி) விநாயகர்மூர்த்தி, வங்கியின் செயலாளர் ந.செந்தில்குமார், கூட்டுறவு சார்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் குமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 23:26:37
Privacy-Data & cookie usage: