பெரம்பலூர்: S.I.R; திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டார்!

schedule
2025-11-11 | 07:22h
update
2025-11-11 | 07:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: S.I.R; Special protest by DMK and allied parties against revision of voters’ list! A.Raja MP participated!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே இன்று காலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ள இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ-வும் நகர செயலாளருமான எம்.பிரபாகரன் வரவேற்றார். சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பெரம்பலூர் தங்க. சித்தார்த்தன் குன்னம் ஏ.கே.அருண், முன்னாள் எம்.எல்.ஏ பா. துரைசாமி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், வக்கீல் என.ராஜேந்திரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆர்.பி.பரமேஷ்குமார், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் டி.சி.பாஸ்கர், சன் சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

முன்னாள் மத்திய மந்திரியும் திமுக பொதுச் செயலாளருமான ஆ ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தோழமைக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ், மதிமுக துணை பொது செயலாளர் டாக்டர். ரொஹையா, விசிக மாநில விவசாய அணி வீர செங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் சாமி.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வீ.ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் வி.ஜெயராமன், மதிமுக மாவட்ட செயலாளர் செ.ஜெயசீலன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ரத்தினவேல், கலையரசன், த.வா.க மாவட்ட செயலாளர் ரவி, கிறித்துவ நல்லெண்ண இயக்கம் மாவட்ட செயலாளர் ரினோ பாஸ்டின், கொ.ம.தே.க மாவட்ட பொறுப்பாளர்கள் இளையப்பன், வேலப்பன் உள்ளிட்டர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

ஒன்றிய செயலாளர்கள்: என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், மருவத்தூர் சி.ராஜேந்திரன், டாக்டர்வல்லபன், ஜெகதீஸ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கி முகுந்தன், எஸ் அண்ணாதுரை, பி எஸ் ஆர் (எ) பட்டுச்செல்வி ராஜேந்திரன், ராமச்சந்திரன், முருகேசன், பேரூர் செயலாளர்கள்: குரும்பலூர் வெங்கடேசன், அரும்பாவூர் ஆர் ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலட்சுமி சேகர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்கள் சு தங்கராசு, சி காட்டு ராஜா, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அணி அமைப்பாளர் கே சி ஆர் குமார், மாவட்ட சிறுபான்மை நல அணி அமைப்பாளர் அப்துல் பாருக், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அ. கருணாநிதி, பொறியாளர் அணி அமைப்பாளர் தங்க கமல், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் க. ரமேஷ், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ எம் கே கரிகாலன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர் வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பேரவை அணி அமைப்பாளர் கே எம் ஏ சுந்தர்ராஜ், மாவட்ட தொமுச பேரவை செயலாளர் ஆர்.ரங்கசாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வே ரமேஷ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் சி ரவி மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காடூர் கவியரசு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர் கார்மேகம், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ரசூல் அகமது, அமைப்புசாரா ஓட்டுனர் அணிஅமைப்பாளர் மணிவாசகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணிய அமைப்பாளர் அருண்குமார் மாவட்ட செய்தி தொடர்பாளர் மீனா. அசோக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி ஆர் சிவசங்கர், வ. சுப்பிரமணியன், அப்துல் கரீம், குன்னம் பிரபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நகராட்சி துணை தலைவருமான து.ஆதவன் நன்றி கூறினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.04.2026 - 00:08:39
Privacy-Data & cookie usage: