பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து; கலெக்டர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்!

schedule
2025-08-15 | 16:27h
update
2025-08-15 | 16:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Samabandhi feast at Siruvachur Madhurakaliamman Temple; Collector attended with family!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் கலெக்டர் ச.அருண்ராஜ், மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் உள்ளிட்ட தன் குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர், கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய புடவைகளை கலெக்டர் அருண்ராஜ் பெண் பக்தர்களுக்கு வழங்கினார்.

Advertisement

இந்து சமய அறநியைலத்துறை மாவட்ட நியமன குழுத்தலைவர் ஆ.கலியபெருமாள், அறங்காவலர் குழு உறுப்பினர் தழுதாழை பாஸ்கர், திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் உமா, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, ஆய்வாளர் தீபலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.05.2026 - 06:48:55
Privacy-Data & cookie usage: