பெரம்பலூர்: சமபந்தி விருந்து; கலெக்டர், எம்.எல்.ஏ கலந்து கொண்டு மக்களுடன் உணவருந்தினர்!

schedule
2026-02-06 | 14:05h
update
2026-02-06 | 14:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Samabandhi feast; the Collector and MLA participated and dined with the people!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருள்மிகு பஞ்சநதீஸ்வரர் திருக்கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தீண்டாமை ஒழிப்பு மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற சமத்துவ விருந்தில் கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, சாதியப் பாகுபாடுகளை ஒழித்து, சமூக சமத்துவத்தை வலியுறுத்தி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்துகள் நடத்தப்படுகின்றன.

சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து உணவருந்துவதே இந்த சமபந்தி விருந்தின் நோக்கமாகும். இது பொதுமக்களிடையே சமூக சமத்துவத்தை உணர்த்துவதோடு, சாதி ஒழிப்பு, தீண்டாமை மறுப்பு மற்றும் சமூக நீதி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

டி.ஆர்.ஓ கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், அட்மா சேர்மன் வீ.ஜெகதீசன், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், உதவி ஆணையர் சிந்து லெட்சுமி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 07:41:08
Privacy-Data & cookie usage: