பெரம்பலூர்: SC, ST மாணவர்கள் B.Sc-Hospitality

Hotel Administration படிக்க வாய்ப்பு; கலெக்டர் தகவல்

schedule
2024-08-08 | 16:26h
update
2024-08-09 | 07:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: SC, ST students have opportunity to study Hotel Administration; Collector Information

 சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition என்ற நிறுவனமானது ISO 9001 2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. Amercian Council of Business அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸ்நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2022- ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் பதின்மூன்றாவது இடத்தில் இந்நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

Advertisement

மேற்கண்ட நிறுவனத்தில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

மேலும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/- வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம்.இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

 மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற எண்ணிலோ அல்லது பெரம்பலூர் மாவட்ட தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.08.2026 - 02:37:16
Privacy-Data & cookie usage: