பெரம்பலூர்: சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை; கலெக்டர் தகவல்!

schedule
2025-11-25 | 13:23h
update
2025-11-25 | 13:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Scholarships for outstanding Adi Dravidian and tribal writers; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் தோற்று விக்கப்பட்டு அச்சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/-நிதி உதவியினை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்
மேலும், விண்ணப்ப படிவத்தினை tn.gov.in என்ற இணைய தளம் அல்லது https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ== என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.11.2025 விண்ணப்பதாரர்கள் தங்களது படைப்பினை இருநகல்களை ( மென்பதிப்பு (அ) ஒளிநகல்) டிஜிட்டல் முறையிலும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 19:35:51
Privacy-Data & cookie usage: