பெரம்பலூர்: ஸ்கூட்டர் மோதி விபத்து; நடந்து சென்ற வாலிபர் பலி! 2 பேர் காயம்!

schedule
2026-09-19 | 07:13h
update
2026-09-19 | 07:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Scooter accident; pedestrian killed, two injured!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்த சுந்தரம் மகன் மணிமாறன் (35), குரும்பலூர் அண்ணா நகரை சேர்ந்த வேணுகோபால் மகன் செல்வா (26), ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் நேற்றிரவு சுமார் 9.20 மணி அளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கார் ஷோ ரூம் அருகே சென்றுக் கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மணிதாறன் ஓட்டினார். அப்போது சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது ஸ்கூட்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஸ்கூட்டரில் பயணித்த மணிமாறன், செல்வா இருவரும் ரத்தக் காயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த போலீசாரின் விசாரணையில் இறந்தவர் வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் என்றும், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.09.2026 - 07:39:35
Privacy-Data & cookie usage: