Perambalur: Seven killed in a tea shop accident; public dissatisfied with the TVK government—DMK and AIADMK were far better! Minister Rajmohan should be relieved of his role as the minister in charge; public demand! Mere prayers cannot satisfy hunger!!
பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாசலம் என்பவரது டீக்கடையில் கடந்த ஆக.11 அன்று நடந்த டீக்கடை தீவிபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள், டீ குடிக்க வந்தவர்கள், டீக்கடையில் வேலை செய்தவர்கள் என சுமார் 16 பேர் காயமடைந்து 7 பலியாகிய நிலையில் கடந்த 20 நாட்கள் கடந்தும் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய பேரிடர் மற்றும் விபத்து காலத்தில் வழங்கப்படும் முதலமைச்சர் நிவராண உதவியும் வழங்கப்படவில்லை.
சட்ட மன்றத்தில் செய்திகள் வெளியான பிறகே ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ வைத்தி கோரிக்கை வைத்த பின்னரே, பெரம்பலூர் எம்.ஏல்.ஏவும் கோரிக்கை வைத்தார். ஆனால், விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர் உழவர் பாதுகாப்பு அட்டை பதிவு செய்து இருந்தன் பேரில் அந்த திட்டத்தில் உள்ள காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. 2.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சரின் நிவாரண உதவி இது வரை அறிவிக்கப்படவில்லை. மக்கள் தேர்வு செய்த அரசு யாருக்காக இயங்குகிறது என்று சந்தேகமும், முதலமைச்சர் அதிகாரிகளுடனோ, அல்லது கட்சியினருடனோ நேரடி தொடர்பில் இருக்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு போதுமான பொறுப்பின்மை மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும், இன்று பெரம்பலூரில் நடந்த இரண்டு திருமணங்களுக்கு வந்த அவர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் நேபாளத்தில் காணமால் போனவர்கள், மீட்டது குறித்து பேசிய அவர் உள்ளூரில் நடந்த விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்ட பிறகே சாரி சொல்லி முடித்து கொண்ட பேட்டியை மீண்டும் தொடர்ந்தார். அதன் பின்னராவது, இறந்தவர்களின் ஒருவர் வீட்டுக்கோ, விபத்து நடந்த டீக்கடையையோ அவர் சென்று பார்வையிடவில்லை. அது பெரம்பலூர் மக்களை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், திமுக, அல்லது அதிமுக ஆட்சியாக இருந்திருந்தால் ஆ.ராசாவோ அல்லது முன்னாள் பொறுப்பு அமைச்சர் சிவசங்கரோ, ஆர்.டி. ராமச்சந்திரனோ, இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனோ, அல்லது பிரபாகரனோ இருந்திருந்தால் எவ்வளவு பிஸியாக இருந்திருந்தாலும், இரவோடு இரவாகவது வந்து பார்த்து ஆறுதல் கூறியிருப்பார்கள். அதோடு முதலமைச்சரின் நிவாரண உதவியையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பெற்றுக் கொடுத்திருப்பார்கள். இது மட்டும் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு திரள் நிதி அல்லது சொந்த நிதியை கொடுத்து உதவியிருப்பார்கள் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பலியான குடும்பத்தினர் பெரும்பாலும் சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் திக்கற்ற அவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஆனால், பொறுப்பு அமைச்சர் ராஜ்மோகனோ பிரார்த்தனை செய்வது போல நன்றாக பேசுகிறார். அது பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தை போக்காது.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக உள்ள ராஜ்மோகன் 2 துறைகளுக்கு அமைச்சராகவும், கட்சியில் முக்கிய பொறுப்புகளையும் வகித்து வருவதால் அவரால் பெரம்பலூரை இனியும் தொடர்ந்து கவனிக்க முடியாது என்பதால் அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றம் எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதால், அவர்கள் அடுத்த மாற்றத்திற்கு தயராகி வருகின்றனர்.