பெரம்பலூர்: குடிநீரில் சாக்கடை: பொதுமக்கள் சாலை மறியல்!

schedule
2024-03-09 | 12:25h
update
2024-03-09 | 12:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Sewage-mixed drinking water: Citizens block the road!

Advertisement

பெரம்பலூர் அருகே குடிநீரில் சாக்கடை கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்: சார் ஆட்சியரின் சமாதான பேச்சு வார்த்தையால், 3 மணி போராட்டம் முடிவுக்கு வந்தது

பெரம்பலூர் அருகே வி.களத்தூர் கிராமத்தில் உள்ள ராயப்பா நகரில், பொதுமக்களுக்கு சாக்கடை கலந்த குடிநிர் விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட சார் ஆட்சியர் கோகுல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து நடத்தப்பட்ட சமாதான பேச்சு வார்த்தை அடிப்படையில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், வி. களத்தூர்- பெரம்பலூர் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 15:42:29
Privacy-Data & cookie usage: