Perambalur: Sheep die after being bitten and mauled by dogs! Public demands control of dogs!
பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்ஙமங்கலம் அருகே உள்ள கூத்தனூர் கிராமத்தில் நாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் செத்தன. ரமேஷ் மனைவி புவனேஸ்வரி (37). விவசாயி. அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் பட்டி அமைத்து ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த நாய்கள் 3 ஆடுகளை கடித்து கொன்று விட்டு ஓடிவிட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி கிராம நிர்வாக அலுவலர் ராஜமோகன் மற்றும் செட்டிகுளம் உதவி கால்நடை மருத்துவர் ராஜ்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூறு ஆய்வு செய்த பிறகு செத்து போன ஆடுகளை புதைத்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகமும், இறந்த ஆடுகளுக்கு அரசின் இழப்பீடு தொகையை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.