பெரம்பலூர்: மாவட்டத்தில் கடைகளுக்கான கேஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரிப்பு; டீ கடைகள், ஹோட்டல்கள் மூடப்படும் அச்சத்தில் உரிமையாளர்கள்!

schedule
2026-03-19 | 12:53h
update
2026-03-19 | 12:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Shortage of commercial gas cylinders intensifies in the district; owners fear tea shops and hotels may be forced to shut down.

ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்து வரும் போரால் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் தாக்கம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் டீக்கடைகள் ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ள நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது வரை பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் இருந்தது. இன்று முதல் வணிக சிலிண்டர்களுக்கான அதிக தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் டீ கடைகள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் உள்ளிட்ட மிக்சர், முறுக்கு உள்ளிட்ட பல்வேறு திண்பண்டங்கள் உள்ளிட்ட உணவு தொடர்பான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் தற்போது கலக்கம் அடைந்துள்ளனர். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் கேஸ் கிடைக்காமல் போகும நிலைக்கு தள்ளப்பட்டால், வெளியூரில் இருந்து பெரம்பலூர் வழியாக செல்லும் பயணிகளும், உள்ளூர்வாசிகளும், ஓட்டல்களை நம்பி சாப்பிடுபவர்களும் பெரும் சிரமமப்படுவதுடன், இந்த நிறுவனங்களில் வேலை செய்த பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கொரோனோவில் இருந்து மீண்ட தொழில் தற்போது போரால் ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பட்டால் கடைகளை மூடும் நிலை மிக அருகே உள்ள மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். டீகடைகள் ஓட்டலகள் மூடப்பட்டால் பெருமளவு வணிகம் பாதிக்கப்படுவதுடன் அதை சார்ந்த தொழில்களான மளிகை கடைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், அரவை நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், மாவு கம்பனிகள் என பல சார்பு தொழில்களும் முடங்கப்படும் அச்சம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சனையாக கருத்தில் கொண்டு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 23:36:28
Privacy-Data & cookie usage: