பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக துணை
மின்நிலைய உதவி செயற்பொறியாளர் கரிகால்சோழன் விடுத்துள்ள அறிவிப்பு:
சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் பிப்.2ம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு
பணிகள் நடை பெற உள்ளது.
ஆகவே, சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், பாடாலூர், செட்டிக்குளம், காரை, நாரணமங்கலம், வரகுபாடி,
சிறுகன்பூர், மருதடி, சாத்தனூர், ஒதியம், கவுல் பாளையம், பெரம்பலூர் தீரன் நகர், நொச்சியம், ஆலத்தூர்
கேட், இரூர், குரும்பாபாளையம், கொளக்காநத்தம், பேரளி, கல்பாடி, கே.எறையூர், மருவத்தூர், பனங்கூர்,
புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, பகுதிகளில் பிப்.2ம் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9.45 மணி
முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என அவரது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்