பெரம்பலூர்: தாட்கோ சார்பில் இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள்; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-09 | 16:19h
update
2026-02-09 | 17:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Skill and employment training programs for youth through TAHDCO; Collector informs!

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி, ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

Advertisement

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக 12ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும், ஆடைவடி வமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி போன்ற பயிற்சிகளுக்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 05:22:40
Privacy-Data & cookie usage: