Perambalur: Sleeping girl dies after being bitten by a snake!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், வரகுப்பாடி நடுத்தெருவை சேர்ந்தவர் அரவிந்தகுமார். இவர் மகள் கவீனா (4). இவர்கள் வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அரவிந்தகுமார் ஏதோ ஊர்வது போல உணர்ந்ததும், கையால் தட்டி விட்டுள்ளார். அப்போது தான் அது சுருட்டை பாம்பு என தெரியவந்தது. விடிந்தும் அவர்கள் வழக்கமான வேலைகளை செய்து கொண்டிருந்தனர். குழந்தை கவீனா மட்டும் நிலைகுலைந்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமாக இருந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர் அவரை காரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு பாம்பு கடித்திருப்பது உறுதி செய்து, அதற்கான முதலுதவியை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்ந்தனர். கவீனா வரும் வழியிலேயே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.