பெரம்பலூர்: சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-05-15 | 17:33h
update
2026-05-15 | 17:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Small-scale Private Sector Job Fair — Collector Announces!

தனியார்துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3ம் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும். தற்போது மே-2026 மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித் தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இம்முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி, சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்ய வேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது நிறுவன காலிப்பணியிட விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 22.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணி முதல் 2.00 மணி வரை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04328-296352 மற்றும் 9499055913 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெருமாறு கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.05.2026 - 18:19:43
Privacy-Data & cookie usage: