பெரம்பலூர்: SC

ST இளைஞர்களுக்கு சோலார் பேனல் பொருத்தும் பயிற்சி; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-20 | 08:27h
update
2026-02-20 | 08:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Solar panel installation training for SC & ST youth; Collector information!

தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சோலர் பேனல் பொருத்தும் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 10, 12ம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

45 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18,000/- முதல் ரூ.30,000/- வரை கிடைக்க வழி வகை செய்யப்பபடும். வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், சென்னை உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக ஏற்கப்பட உள்ளது, என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 23:00:48
Privacy-Data & cookie usage: