Perambalur: Son kills mother after hearing about illicit affair with woman!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் – சுகுணா இவர்களது மகன் மாமலைவாசன் (23) எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார். தாமரைக்கண்ணன் கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார் தாய் சுகுணா(43) உடன் மாமலைவாசன் வசித்து வந்தார், இந்நிலையில், கடந்த 9 ம் தேதி தாய்க்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மாமலைவாசன் தாய் சுகுணாவை கழுத்தை நெரித்துள்ளார், இதில் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார், அக்கம்பக்கத்தினர் அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், உடல் நிலை சரி இல்லாமல் இறந்து விட்டார் என கூறி உடலை அடக்கம் செய்துவிட்டனர்.
இந்நிலையில், சுகுணா மரணத்தில் அரும்பாவூர் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சுகுணாவின் கழுத்தில் இருந்த தடயங்களை வைத்து மாமலைவாசனிம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் மாமலைவாசன் தன்னிடம் சண்டை போட்டதால் ஆத்திரமடைந்து தனது தாய் சுகுணாவை கழுத்தை நெரித்ததால் மயக்கமடைந்தார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அங்கு மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்ததால், அவரரை ஊர் முன்னிலையில் அடக்கம் செய்துவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாமலைவாசனை போலீசார் நேற்றுமுன் தினம் கைது செய்த நிலையில், மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாமலைவாசன் அதே பகுதியில் அம்மா முறை உள்ள உறவுக்கார பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்துள்ளார். இதை தாய் சுகுணா கண்டித்துள்ளார். அப்போது, அவளும் உனக்கு அம்மா முறைதான் வேண்டும், நானும் அம்மா முறைதான் வேண்டும் என கடுமையாக கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்து மாமலைவாசன் கழுத்தை நெறித்தாக தெரிவித்தார். வாழவேண்டிய வயதில் இளைஞன் ஒழுக்கம் தவறியதால், பெற்ற தாயை கொன்ற கொலைப்பழியுடன் வாழ்வை இழந்து சிறைப்பறவையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.