பெரம்பலூர்: தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்!

schedule
2025-06-18 | 10:29h
update
2025-06-18 | 10:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special Abhishekam for Kalabhairava on Theipirai Ashtami!

பெரம்பலூர் நகரில், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ காலபைரவருக்கு பால், தயிர், சந்தானம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னாள் அறங்காவலர் பெ.வைத்தீஸ்வரன், வீரபாண்டி, ஸ்ரீதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பைரவர் அருளை பெற்றனர். பூஜைகளை கவுரி சங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் என்.ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.06.2026 - 06:51:50
Privacy-Data & cookie usage: