பெரம்பலூர்: மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்! கலெக்டர் தகவல்!

schedule
2026-01-09 | 15:09h
update
2026-01-09 | 15:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special camp for persons with disabilities and marginalized voters! Collector’s announcement!

இந்திய தேர்தல் ஆணையம் ” அணுகக்கூடிய தேர்தல் என்ற கருப்பொருளில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் , மூன்றாம் பாலின வாக்காளர்கள், பழங்குடியின வாக்காளர்கள் ஆகியோர் அனைவரையும் தேர்தல் நடைமுறைகளில் முழுவதுமாக பங்கேற்றிடச் செய்திடுவதின் முதற்படியாக மேற்கண்ட பிரிவினரில் 18 வயது நிரம்பிய தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் பல்வேறே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

Advertisement

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (10.01.2026, சனிக்கிழமை) பெரம்பலூர், குரும்பலூர், வெங்கலம், பசும்பலூர், வாலிகண்டபுரம், வடக்கலூர், வரகூர், கீழப்புலியூர், செட்டிக்குளம், கொளக்காநத்தம், கூத்தூர் ஆகிய அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர்/முகவரி/உறவுமுறை/பாலின திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இப்பிரிவினரின் நலன் பொருட்டு செயல்படும் அனைத்து அரசு சாரா நிறுவனங்களும் (NGOs), திருநங்கைகள் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியமும், தங்கள் உறுப்பினர்களில் 01.01.2026 அன்று 18 வயது நிறைவடைந்த அனைவரையும் இம்முகாம்களில் கலந்து கொள்ள செய்து, எவரும் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 12:53:09
Privacy-Data & cookie usage: