பெரம்பலூர் : மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான சிறப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-07-22 | 13:41h
update
2026-07-22 | 13:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special camp for persons with disabilities at the block level; Collector announces!

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ சான்று பெற்று தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ), நலவாரியத்தில் பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான சிறப்பு முகாம்கள் வருகின்ற 28.07.2026 அன்று ஆலத்தார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 30.07.2026 அன்று வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 04.08.2026 அன்று வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 06.08.2026 அன்று பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 02 .00 மணிவரை நடைபெற உள்ளது . எனவே, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்று அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1, ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் கூடிய கைபேசி ஆகியவற்றுடன் இம்முகாமிற்கு நேரில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.07.2026 - 13:53:12
Privacy-Data & cookie usage: