பெரம்பலூர் : மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டருக்கு சிறப்பு முகாம்!

schedule
2025-02-17 | 12:48h
update
2025-02-17 | 12:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special camp for petrol scooters with connecting wheels for the differently-abled!

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு கால் விபத்து இதர காரணங்களால் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ மற்றும் இளம்பிள்ளை வாதத்தினால் (போலியோ) பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்காக விலையில்லாமல் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

எனவே, இத்தகுதியுடைய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெற 18 – 65 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்படுவதற்கு இதுநாள் வரை அரசு துறைகளில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறாதவராக இருக்கவேண்டும்.

எனவே, தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், கல்வி சான்றிதழ் நகல், பணிபுரிவதற்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 4 ஆகியவற்றுடன் 19.02.2025 புதன் கிழமை அன்று காலை 10 மணியளவில் நேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கீழ்த்தள கூட்ட அரங்கில் உரிய ஆவணங்களுடன் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலக தொலைபேசி எண்: 04328 – 225474 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 07:43:59
Privacy-Data & cookie usage: