பெரம்பலூர்: ரேசன் கார்டில், குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-03-06 | 14:25h
update
2025-03-06 | 15:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special camp to register fingerprints of family members on ration cards; Collector informs!

குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டுமென கலெக்டர் கிரேஸ் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், பொது விநியோகத்திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதார்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை 31.03.2025-க்குள் நியாய விலைக் கடையில் உள்ள PoS இயந்திரத்தில் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். எனவே, வேலை நாட்களில் தாங்கள் பொருள் பெறும் நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

மேற்படி, e-KYC பதிவு செய்வது தொடர்பாக எதிர்வரும் 08.03.2025 (சனிக்கிழமை) மற்றும் 09.03.2025 (ஞாயிற்றுகிழமை) ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் நடை பெறவுள்ளது. தங்களது குடும்ப உறுப்பினர்களில் இதுவரை கைரேகையினை பதிவு செய்யாத நபர்கள் மேற்படி, முகாமில் பதிவு செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளவர்கள் அவர்களுக்கு அருகாமையில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையினை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களிலும் நியாய விலைக் கடைகளில் தங்களது கைரேகையினை பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 16:10:19
Privacy-Data & cookie usage: