பெரம்பலூர்: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் முகாம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-02 | 17:07h
update
2026-06-02 | 17:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Special Industrial Loan Camp for Micro, Small, and Medium Enterprises; Collector Announces!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ்கடனுதவி வழங்கி வருகிறது.

Advertisement

திருச்சி கண்டோன்மென்ட் கிளை அலுவலகத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் 01.06.2026 முதல் 30.06.2026 வரை நடைபெறகிறது. முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.1.5 கோடிவரை வழங்கப்படும். சென்ற ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் பெறப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும், மேலும் தகவலுக்கு 0431-2460498, 4030028, 94443968805, 9445023460 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 17:25:03
Privacy-Data & cookie usage: