Perambalur: Special intensive voter list revision camp; DMK members must participate actively! District DMK in-charge V. Jagadeesan’s statement!!
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினர் முனைப்பாக ஈடுபட வேண்டும் என மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், கூறியுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு பணிகள் நடைபெற்று, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் 27.12 .2025, சனிக்கிழம, 28.12.2025, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 03.01.2026,சனிக்கிழமை 04.01.2026, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களால் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. கழக நிர்வாகிகளுடன் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பி.எல்.ஏ-2), வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்டுகள் (பி.டி.ஏ) , வாக்குச் சாவடி (பி.எல்.சி), கிளை உறுப்பினர்கள் நிகழ்ச்சி கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர் வாக்காளர் பட்டியலை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து வாக்குச் சாவடி சிறப்பு முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும் புதிதாக சேர்க்க வேண்டிய வாக்காளர்களையும் கழக ஆதரவு வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும். இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்களை நீக்கிடவும் பெயர், முகவரி திருத்தம் செய்திடவும், உரிய படிவத்தை நிரப்பி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்.
இந்த பணி சிறப்பாக அமைந்திட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உள்ளிட்டவர்களிடம் உரிய அறிவுறுத்தல் வழங்கி 4 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என்றும், இந்த பணியில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வாக்குச்சாவடியில் நடைபெற உள்ள வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு முகாமில் பங்கேற்று பணியாற்ற வேண்டும். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட விவரங்களை தலைமை கழகத்திற்கு அனுப்பிடும் வகையில் பெரம்பலூர் மாவட்ட கழகத்திலும் பட்டியலை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன், என அந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.